மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி?
டெல்லி: மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி அல்லது ராமச்சந்திர பிள்ளை தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் பிரகாஷ் காரத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ஹைதரபாத்தில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அவர் பதவி விலக இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பொதுச்செயலர் பதவி 2 ஆண்டுகாலத்துக்கானது. ஒருவர் பொதுச்செயலர் பதவியில் 3 முறை இருக்கலாம். கட்சிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால்மட்டும் 4 வது முறையாக பொதுச்செயலராக நீடிக்க முடியும்.
தற்போதைய பொதுச்செயலர் பிரகாஷ் காரத் தொடர்ந்து பதவியில் நீடிக்கக் கூடும் என்று கூறப்பட்டாலும் கட்சிக்குள் அவருக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. இதனால் பதவி விலகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பிரகாஷ் காரத்தின் நிலைப்பாடுகளால்தான் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் கட்சி அளவுக்கு படுதோல்வியைத் தழுவியது என்று சீதாராம் யெச்சூரி போன்றவர்களின் குற்றச்சாட்டு. இதனால் இம்முறை சீதாராம் யெச்சூரி பொதுச்செயலராகலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 76 வயதாகும் ராமச்சந்திர பிள்ளையின் பெயரும் அடிபடுகிறது. தெலுங்கானா ஊடகங்களோ பி.வி. ராகவலுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று எழுதி வருகின்றன.
இவர்களுக்கு அப்பால் பிருந்தா காரத் பெயரும் அடிபடுகிறது. 2005ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோவில் இடம்பெற்றுளவர் பிருந்தா காரத். ஒரு பெண்ணை கட்சியின் பொதுச்செயலராக்கலாமே என்று பிருந்தா காரத் ஆதரவாளர்கள் முனைப்புகாட்டுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications