வர்ற சம்மருக்கு அண்டார்டிகாவுக்கு போய்ட்டு வாங்களேன் பேசாம!
டெல்லி: வழக்கமான சுற்றுலாக்களைத் தவிர்த்து வித்தியாசமான சுற்றுலாக்களுக்கு மக்கள் முயற்சிக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆய்வாளர், பத்திரிகையாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என பலமுகம் கொண்டவரான பிரபு கத்தே.
"By Thumb, Hoof and Wheel" என்பது இவர் சமீபத்தில் எழுதியுள்ள புத்தகம். அதில் தனது வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களை விளக்கியுள்ள அவர் சுற்றுலா செல்வோர் வழக்கம் போல யோசிக்காமல் மாற்றி யோசிக்க வேண்டும் என்று ஆலோசனையும் கூறியுள்ளார்.
உடம்பில் தெம்பு இருக்கும் ஒவ்வொருவரும் ரிஸ்க் எடுத்து நாம் புத்தகத்தில் மட்டுமே பார்த்துப் பழகிய இடங்களுக்குப் போய் வர வேண்டும் என்று கூறுகிறார் கத்தே.
இதுகுறித்து அவரது நூலில் இடம் பெற்றுள்ள கருத்துகளிலிருந்து சில..

பாடகோனியா...
பாங்காக், சிங்கப்பூர், துபாய் என்றுதான் பலரும் போகிறார்கள். ஆனால் மாற்றி யோசிக்க வேண்டும். நான் தென் அமெரிக்காவுக்கு சுற்றுலா போயிருந்தபோது அதிகம் யாரும் போகாத பாடகோனியாவுக்குப் போயிருந்தேன். அது மட்டுமல்ல, அன்டார்டிகாவுக்கும் போயிருந்தேன்.

சில்க் ரோடு...
லத்தீன் அமெரிக்காவில் உள்ள கிரிங்கோ டிரெய்ல், சில்க் ரோடு ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. கண்டிப்பாக இங்கு போக வேண்டும்.

அண்டார்டிகா...
அண்டார்டிகாவுக்குப் போவது என்பது அடுத்த கிரகத்திற்குப் போவது போன்ற உணர்வைக் கொடுக்கும். பட்ஜெட் டிராவல்லருக்கும் இது சாத்தியமான பயணம்தான்.

என் அட்வைஸ்...
பாடகோனியா, அன்டார்டிகா ஆகியவற்றுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது போக வேண்டும் என்பதே எனது அறிவுரையாகும். அவை போகக் கூடிய பட்ஜெட்டுக்குள்தான் உள்ளன.

உலகின் கடைசிப் பகுதி...
நான் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகருக்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக கிட்டத்தட்ட அர்ஜென்டினாவை முழுமையாக வலம் வந்து உலகின் கடைசிப் பகுதி என்று அழைக்கப்படும் உசுயியா பகுதிக்குச் சென்றேன். அங்கிருந்து கப்பல் மூலமாக அன்டார்டிகாவுக்குச் சென்றேன்.

அடிஸ் அபாபா...
அதேபோல எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா ஒரு அருமையான நகரம். இன்னும் உயிர்ப்போடு இருக்கும் பழம்பெரும் நாகரீகத்தின் மிச்சத்தில் அதுவும் ஒன்று. பார்க்க வேண்டிய நகரம் அடிஸ் அபாபா. மலைக்க வைக்கும் நகரம், அருமையான சர்ச்சுகளை அங்கு பார்க்கலாம்.

சீனா...
சீனால் ரயிலில் பயணிக்கும்போது அருமையான பழக்கத்தைக் காண முடிந்தது. அதாவது ரயில் ஏதாவது ரயில் நிலையத்தை அடையும்போது அதற்கு முன்பாகவே அனைத்து டாய்லெட்டுகளையும் பூட்டி வைத்து விடுகிறார்கள். இதன் மூலம் ரயில் நிலையங்களை அசுத்தமாக்குவதைத் தவிர்க்கிறார்கள்.

பழமை மாறாத் ஐடம்...
சீனாவின் சில்க் ரோடு இப்போது நான்கு வழி சாலையாக மாறியுள்ளது. பல ஆயிரம் வீடுகளை இடித்து விட்டு இந்த சாலையைப் போட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் பழைய பெருமை மாறாமல் இது இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

பயண அனுபவம்...
கத்தே இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் போய் வந்து விட்டாராம். தனது இந்த லேட்டஸ்ட் புத்தகத்தில் பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பாடகோனியா, சீனா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயண அனுபவத்தை விவரித்துள்ளார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications