கள்ளநோட்டை தடுக்க பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க திட்டம் - லோக்சபாவில் மத்திய அரசு தகவல்!
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும், விரைவில் பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில் பழைய 500, 1,000 நோட்டு ரத்து செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ.500, ரூ.1,000 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இருப்பினும், சில்லரை தட்டுப்பாடு தீரவில்லை. இதை போக்க, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு அதிகம் புழக்கத்துக்கு விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிளாஸ்டிக் கரன்சி அச்சிட்டு வெளியிட உள்ளதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் இதுதொடர்பான கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிளாஸ்டிக் அல்லது பாலிமரில் ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கு மூலப்பொருட்கள் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
பிளாஸ்டிக் நோட்டின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுதான். ஆனால் இதில் கள்ளநோட்டு அச்சிட முடியாது என மத்திய அரசு கருதுகிறது. முதன்முதலில் இத்தகைய கரன்சி, கள்ளநோட்டை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டிருந்தது.
ரிசர்வ் வங்கி நீண்ட காலமாகவே பிளாஸ்டிக் கரன்சி வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதுபற்றி, 2014ம் ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய தட்பவெப்ப நிலைக்கு பிளாஸ்டிக் கரன்சி ஏற்புடையதா என்று அறிய கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் போன்ற குறிப்பிட்ட நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிட முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டில் பாதுகாப்பு அம்சம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அர்ஜூன் ராம் மெஹ்வால், நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.1,000 நோட்டில் பாதுகாப்பு இழை இல்லை. இது ஹோசங்காபாத்தில் உள்ள பேப்பர் மில்லில் இருந்து சப்ளை செய்த தாளில் அச்சிடப்பட்டது. இதை கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக இந்திய கரன்சி அச்சக மையம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராமல் தடுக்க கூடுதல் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications