என் சகோதரியை காப்பாற்றுங்கள்: ட்வீட் செய்த நபருக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமீரகத்திற்கு வேலைக்கு சென்று அங்கு சிக்கியுள்ள தனது சகோதரியை மீட்டு கொடுக்குமாறு இந்தியர் ஒருவர் ட்விட்டர் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேட்டுள்ளார்.

Please rescue my sister: Man tweets, Sushma Swaraj replies

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஃபேஸ்புக், ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டு வருவதுடன், வெளிநாடுகளில் ஏதாவது பிரச்சனையில் சிக்கி உதவி கோரும் இந்தியர்களுக்கு உதவியும் வருகிறார்.

இந்நிலையில் தேவ் தம்போலி என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

@SushmaSwaraj ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எனது சகோதரியை காப்பாற்ற உதவி வேண்டும். அவர் வேலைக்காக கடந்த 14ம் தேதி அமீரகத்திற்கு சென்றார். அங்கு அவர் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். தயவு செய்து என்னை +97466893988 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த சுஷ்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

@Devtamboli ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நம் தூதரிடம் உதவி கோரியுள்ளேன். அவர் உங்களை தொடர்பு கொண்டு தேவையானவற்றை செய்வார் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+