ஓடியாடி விளையாடிய 2 வயது மகள் படுத்த படுக்கையாகிவிட்டாள்: உதவி கேட்டு மன்றாடும் தந்தை

Subscribe to Oneindia Tamil

மும்பை: நிமோனியாவுடன் போராடும் 2 வயது மகளின் உயிரை காக்குமாறு நல் உள்ளங்களிடம் தந்தை ஒருவர் உதவி கேட்டு நிற்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அய்ரோலி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் பவார். ரயில்வேஸில் டெக்னீஷியனாக வேலை செய்யும் அவருக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம்.

மனைவி, 2 வயது மகள் நிர்வி, தாய், சகோதரருடன் வசித்து வருகிறார் மனோஜ். உடல்நலம் பாதிக்கப்பட்டு நிர்வி கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Severe Necrotising Pneumonia Empyema என்ற பாதிப்புக்குள்ளாகியுள்ள நிர்வியின் நுரையீரலை சுற்றி அதிக அளவில் நீரும், ரத்தமும் சேர்ந்துவிடுவதால் குழந்தை சிரமப்படுகிறாள். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்கு மொத்தம் ரூ. 15 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் 3 வாரங்களாவது நிர்வி மருத்துவமனையில் இருக்க வேண்டும். மனோஜ் இதுவரை ரூ. 4.5 லட்சம் செலவு செய்துள்ளார். இருந்த காரையும் விற்றுவிட்டார். இனியும் செலவு செய்ய பணம் இல்லாமல் செய்வது அறியாது திணறுகிறார்.

ஓடியாடி விளையாடிய மகள் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதை பார்த்து மனோஜ் தினம் தினம் கண்ணீர் வடிக்கிறார். தனது மகளின் உயிரை காப்பாற்றுமாறு தயாள குணமுள்ளவர்களிடம் மன்றாடுகிறார்.

உதவி செய்ய விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+