கொச்சியில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் நாளை முப்படை தளபதிகள் மாநாடு- மோடி பங்கேற்பு
கொச்சி: கொச்சி கடற்பரப்பில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் முப்படை தளபதிகளின் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
நாட்டின் முப்படை தளபதிகள் மாநாடு டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இதனை மாற்றி டெல்லிக்கு வெளியே முப்படைத் தளபதிகளின் மாநாடு நடைபெற வேண்டும் என்ற யோசனையை கடந்த ஆண்டு பிரதமர் மோடி முன்வைத்திருந்தார்.

டெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற முப்படை தளபதிகளின் மாநாட்டின் போது இந்த கருத்தை மோடி முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முப்படைத் தளபதிகளின் மாநாடு கொச்சி கடற்பரப்பில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் நாளை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு முப்படைத் தளபதிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்காலத்தில் பாதுகாப்புகுறித்த சவால்கள் நமக்கு தெரிந்த ஒன்றாகவே இருக்கும். ஆனால் எதிரிகள்தான் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். ஆகையால் அவர்களை சமாளிக்க முப்படைகள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. தொழில் நுட்ப முன்னேற்றம் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். கணிணி மற்றும் இணைய ஆதிக்கம் ஆகியவற்றால் கடல், வான்வெளி, நிலங்களின் வழியாக எல்லைகளை கண்காணிப்பது சிரமமாக அமையும் என கூறியிருந்தார்.
மேலும் டிஜிட்டல் தொழில் நுட்பம் ராணுவப் பிரிவிலும் தேவை எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். நாளை நடைபெறும் முப்படை தளபதிகள் மாநாட்டிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமான சவால்களை எதிர்நோக்குவது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தக் கூடும்.
இது தொடர்பாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா நமது ஒன் இந்தியாவிடம் கூறுகையில், பிரதமர் மோடியுடன் இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், மூத்த மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பின்னர் அவர் பங்கேற்கும் முதலாவது முப்படை தளபதிகளின் மாநாடு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications