ராஜபக்சேவுக்குப் போன் செய்ய நினைத்து லெட்டரோடு நிறுத்திய மன்மோகன் சிங்
டெல்லி ராஜபக்சேவுக்கு முதலில் போன் செய்து பேசத்தான் நினைத்திருந்தாராம் பிரதமர் மன்மோகன் சிங். பின்னர் அதை கைவிட்டு விட்டு கடிதத்தோடு நிறுத்தி விட்டாராம்.
ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் போன் செய்யவில்லை என்பதை ராஜபக்சேவின் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே, காமன்வெல்த் மாநாட்டுக்கு வருவதில்லை என்ற இந்தியப் பிரதமரின் முடிவுக்கு இலங்கை அரசே காரணம் என்று இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ராஜபக்சேவிடம் ஒப்படைக்கப்பட்ட மன்மோகன் கடிதம்
ராஜபக்சேவுக்கு, தான் காமன்வெல்த் மாநாட்டுக்கு வர முடியாததை விளக்கி பிரதமர் எழுதிய கடிதத்தை இந்தியத் தூதரகம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ராஜபக்சேவிடம் ஒப்படைத்தது.

போன் பண்ணவில்லை
முதலில் போன் செய்யத்தான் பிரதமர் நினைத்திருந்தாராம். பின்னர்தான் கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொண்டாராம். கடிதம் கொடுக்கப்பட் பி்ன்னரும் கூட அவர் ராஜபக்சேவுக்குப் போன் செய்யவில்லையாம்.

இனிமேலும் போன் வராதாம்
மேலும் ராஜபக்சேவுக்கு கடிதம் கொடுக்கப்பட்டு விட்டதால் இனிமேல் பிரதமர் போன் செய்யும் வாய்ப்பு இல்லை என்று இந்திய தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல்வாதிகள் அதிருப்தி
இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங்கின் முடிவுக்கு இலங்கை அரசியல்வாதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இலங்கை மீடியா அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லா கூறுகையில், அனைத்து நாட்டுத் தலைவர்களையும் அழைப்பது இலங்கை அரசின் கடமை. அதை நாங்கள் செய்தோம். இருப்பினும் வருவதும், வராமல் போவதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் உரிமையாகும். மன்மோகன் சிங் வர முடியாமல் போனதை விளக்கி அதிபருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். மிகவும் சுருக்கமான கடிதம் அது என்றார் அவர்.

இலங்கை முஸ்லீ்ம் காங்கிரஸ் வருத்தம்
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ராப் ஹக்கீம் கூறுகையில், பிரதமரின் முடிவு வருத்தம் தருகிரது. அதேசமயம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகை ஆறுதல் தருகிறது என்றார்.

ராஜபக்சேதான் காரணம்
இந்த நிலையில் பிரதமரின் முடிவுக்கு ராஜபக்சே அரசைத்தான் குற்றம் சாட்ட வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது. அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸா அட்டநாயகே கூறுகையில், இலங்கைக்கு இது மிகவும் பாதகமான முடிவாகும். தூதரக ரீதியில் சரியான முறையில் இந்திய அரசை இலங்கை அரசு அணுகவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications