மிஸ்டர் ரிலையன்ஸ்.... மோடியை ட்விட்டரில் ஓட்டிய கேஜ்ரிவால் #RelianceJio
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் ' மிஸ்டர் ரிலையன்ஸ்' என விமர்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இணைய சேவையை நேற்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார். இதுதொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுக்கான நுழைவாயில் ஜியோ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மோடியை மிஸ்டர். ரிலையன்ஸ் என்று தம்முடைய ட்விட் பக்கத்தில் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.
PM as Mr Reliance https://t.co/0nv2DZBws2
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 2, 2016
இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் கேஜ்ரிவால் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து விளம்பர மாடலாக இருங்கள்; நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் 2019-ல் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மோடியை சாடியுள்ளார்
அம்பானி குடும்பத்தின் பாக்கெட்டில் மோடி இருப்பதற்கு இதைவிட வேறு எந்த ஒரு சான்றும் தேவையில்லை எனவும் சகட்டுமேனிக்கு ட்விட் போட்டு பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார் கேஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications