மழை பெய்தால் காணாமல் போய்விடும் சாலைகளை அமைக்கும் கான்ட்ராக்டர்கள்: மோடி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சண்டீகர்: ஹரியானா மாநிலம் கைதால் முதல் ராஜஸ்தான் மாநில எல்லை வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலை போடும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் மோடி பேசியதாவது:
- கிருஷ்ண ஜென்மாஷ்டமி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தர்ம பூமியான குருஷேத்திரம் அமைந்துள்ள ஹரியானாவுக்கு நான் இன்று வந்துள்ளேன். பிரதமரான பிறகு ஹரியானாவுக்கு நான் வருவது இதுதான் முதல் முறை.
- ஹரியானா மாநிலத்தார் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ கற்றவர்கள்.
- உலகம் வளர்ந்து சென்று கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் நாம் சும்மா இருக்க முடியாது. சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்போதுதான் ஒரு நாட்டால் வளர முடியும்.
- ஹரியானாவையும்-ராஜஸ்தானையும் சாலை வசதியால் இணைப்பது வர்த்தக பயன்பாட்டுக்கு மிகவும் வசதியானதாக அமையும். வளர்ச்சி மட்டுமே நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை மிக்கது.
- நமது நாட்டில் கான்ட்ராக்டர்கள் போடும் ரோடு, பலத்த மழை பெய்தால் காணாமல் போய்விடும். இது என்னுடையது இல்லை, எனக்கென்ன வந்தது என்ற மக்களில் பலரின் மனநிலைதான் இந்த நாட்டை அழித்துவிட்டது.
- புற்றுநோயைவிட மோசமானது ஊழல். இந்த நாட்டில் இருந்து ஊழல் வேரடி மண்ணோடு அகற்றப்பட வேண்டும். அநீதியை இந்த நாடு இதற்கு மேலும் பொறுத்துக்கொண்டிருக்காது என்று நம்புகிறேன். இவ்வாறு மோடி பேசினார். 1400 கோடி மதிப்புள்ள இந்த சாலை திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications