வங்கதேசத்திற்கு ரூ.12,800 கோடி கடனுதவி !! பிரதமர் மோடி அறிவிப்பு!!!
டாக்கா : வங்கதேசத்திற்கு ஏற்கனவே வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ள 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவியுடன் தற்போது புதிதாக ரூ.12,800 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் வங்கதேசத்திற்கு சென்றனர். அங்கு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.
பின்னர் உரையாற்றிய மோடி, இரு நாட்டு எல்லை பிரச்னையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். வலுவான தெற்காசியாவை உருவாக்க இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்படும் என்றும், பாதுகாப்பு, வளர்ச்சி , மதச்சார்பற்றத் தன்மைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
41 ஆண்டுகால எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.
வங்கதேசத்திற்கு ஏற்கனவே வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவியுடன் தற்போது புதிதாக ரூ.12,800 கோடி கடனுதவியையும் அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் கடலோர பாதுகாப்பு, மனித உரிமை மீறலை ஒழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் போலியாக புழங்கும் இந்திய கள்ள நோட்டுக்களை ஒழிப்பது உள்ளிட்டவைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு துறைகளில் 22 ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகின.
வங்கதேசத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க இருநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிடம் தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications