இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்.. பிரதமர் மோடி பிரச்சாரம்!
தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கொழும்பு: தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
ஈஸ்டர் பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

என்ன பேசினார்
ராஜஸ்தானில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். புனிதமான பண்டிகை நாள் ஒன்றில் இப்படி கொடூரமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் மிக கொடுமையான ஒன்று.

தீவிரவாதம் ஒழியும்
நீங்கள் வாக்களிக்க செல்லும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின் தாமரை சின்னத்தை பாருங்கள். அதை நீங்கள் அழுத்தினால் தீவிரவாதம் ஒழியும். நாங்கள் தீவிரவாதத்தை அழிப்போம்.

இலங்கை என்ன
இலங்கையில் நடந்தது போன்று இந்தியாவில் நடக்காமல் இருக்க நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்குக்கு சக்தி இருக்கிறது. நீங்கள் தாமரைக்கு வாக்களித்தால் தீவிரவாதத்திற்கு எதிராக நான் போராட முடியும். நாடு பாதுகாப்பாக இருக்கும்.

உலகம் எப்படி
உலகம் முழுக்க இப்படி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது இலங்கையில் இப்படி தாக்குதல் நடந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications