மத்திய அமைச்சர்களாக பதவியேற்கும் 9 பேர் பிரதமருடன் சந்திப்பு.. மோடி இல்லத்தில் விருந்து
இன்று மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கஉள்ள 9 பேருக்கும் பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்தளிக்கிறார். அதன் பிறகு பிரதமர், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் மத்திய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்கவுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார்.
புதிய அமைச்சர்கள் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கின்றனர். அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார்,ஹர்தீப் சிங் புரி,கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக இன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவையில் தற்போது 72 அமைச்சர்கள் உள்ளனர். புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அரசில் அமைச்சர்கள் எண்ணிக்கை 81 ஆக உயருகிறது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்க விழா நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.
முன்னதாக, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த சூழ்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.
இதனால், மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரலாமென்றும், தம்பிதுரை, அதிமுகவைச் சேர்ந்த வேணுகோபால், வி. மைத்ரேயன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் அதிமுகவில் குழப்பம் நீடிப்பதால் தற்போதைய அமைச்சரவை விரிவாக்க்கத்தில் அதிமுக்க இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications