சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல்
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நேற்று காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சண்டிகர்: தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் நேற்று காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

சுர்ஜித்சிங் பர்னாலா 1990-91, 2004-2011 வரை இரண்டு முறை தமிழக கவர்னராக பதவி வகித்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்துள்ளார்.
லக்னோவில் சட்டம் பயின்ற பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு,ஆந்திரா,உத்தரகாண்ட் உள்ளிட்ட 4 மாநில கவர்னராக இருந்தவர் பர்னாலா என்பது குறிப்பிடத்தக்கது
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவு வேதனையளிக்கிறது. மேலும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பங்களிப்பை தேசம் நினைவு கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
இதேபோல் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பர்னாலாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் பர்னாலா எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஆளுநர் பதவியில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர் சுர்ஜித் சிங் பர்னாலா என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் திமுக அரசை கவிழ்க்க மத்திய அரசு கோரிய போது அதை துணிவுடன் எதிர்த்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications