தேசிய தினம்: சவுதி அரேபிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: சவுதி அரேபிய தேசிய தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் 85வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1932 ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி சவுதி அரேபியாவை ராஜ்ஜியமாக மன்னர் அப்துல் அஜீஸ் அறிவித்தார். அதில் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
Greetings & best wishes to the people of Saudi Arabia on Saudi National Day.
— Narendra Modi (@narendramodi) September 22, 2015 இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி மக்களுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சவுதி தேசிய தினத்தில் சவுதி அரேபிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications