காவிரி மேலாண்மை வாரியம்.. மோடி தலைமையில் அவசர ஆலோசனை
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மேலும் அக்டோபர் 4 ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்துக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் தங்கள் மாநில பிரதிநிதிகளை பரிந்துரைக்க வேண்டும்.
இந்தக் குழு அமைக்கப்பட்டு, வரும் 6-ம் தேதிக்குள் தமிழகம், கர்நாடகா அணைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 6-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications