இடுப்பில் காவி.. கையில் தடி.. டோட்டலாய் மாறி கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி!
Recommended Video
டேராடூன்: தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

நடை திறப்பு
அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதிக கூட்டங்கள்
பிரசாரம் முடிந்ததும் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த தேர்தலில் அதிக பிரச்சார கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தியுள்ளார். அவர் 115க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார்.

ஹெலிகாப்டரில் பயணம்
இந்நிலையில் நேற்று பிரச்சாரம் ஓய்த கையோடு பிரமதர் மோடி ஓய்வெடுக்கும் வகையில் அவர் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இன்று அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கேதார்நாத் சென்றார்.

சிறப்பு வழிபாடு
இந்நிலையில் நேற்று பிரச்சாரம் ஓய்ந்த கையோடு பிரமதர் மோடி ஓய்வெடுக்கும் வகையில் அவர் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இன்று அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கேதார்நாத் சென்றார்.

இடுப்பில் காவி..
இடுப்பில் காவி துண்டை கட்டியபடி கையில் தடியுடன் பிரதமர் மோடி கேதார்நாத் சென்றார். இன்று கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்த மோடி, நாளை பத்ரிநாத் கோயிலுக்கும் செல்கிறார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications