மோடிதான் பெஸ்ட்.. அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.. இந்தியா டுடே மூட் ஆப் நேஷன் சர்வே!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவை இதுவரை ஆட்சி புரிந்தவர்களில் பிரதமர் மோடிதான் சிறந்த பிரதமர், அவரே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Mood of the Nation Survey | மோடி தான் சிறந்த பிரதமர்

    இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ஆட்சி கடந்த 6 வருடங்களில் எப்படி இருந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. எல்லா வருடமும் இரண்டு முறை இந்த சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    PM Modi is the best PM, He has to rule again says India Today Mood of Nation Survey

    இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின்படி இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடிதான் என்று 44% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது முன்னாள் பிரதமர்கள் நேரு, மன்மோகன் சிங் ஆகியோரை விட பிரதமர் மோடி சிறந்தவர் என்று 44% பேர் கூறியுள்ளனர்.

    அதேபோல் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 66% பேர் கூறியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்று 8% பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சி மிக சிறப்பாக இருப்பதாக 78% பேர் கூறியுள்ளனர்.

    மேலும் பிரதமர் மோடி சுமாராக ஆட்சி செய்து இருப்பதாக 17% பேர் கூறியுள்ளனர். மோசமாக ஆட்சி செய்து வருவதாக 5% பேர் கூறியுள்ளனர். அதேபோல் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி 69% பிரபலமாக இருக்கிறார்.மேலும் இப்போது தேர்தல் வைத்தால் பாஜக கூட்டணி 283 இடங்களை பெரும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் 49 இடங்களையும் மற்ற கூட்டணி கட்சிகள், மாநில கட்சிகள் 211 இடங்கள் வரை பெறும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+