ரூ.451 கோடி! கடவுள் சிவனை பிரதிபலிக்கும் கிரிக்கெட் மைதானம்! பிரதமர் மோடி அடிக்கல்! படம் பாருங்க
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.451 கோடி செலவில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இதற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மைதானம் கடவுள் சிவனை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாக அமைய உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். இவர் இந்த தொகுதியின் எம்பியாக 2வது முறையாக இருக்கிறார். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் வாரணாசியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொண்டு வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் ரூ.120 கோடி செலவில் 30 ஏக்கர் நிலம் உத்தர பிரதேச மாநிலம் கஞ்சாரி பகுதியில் கிரிக்கெட் மைதானத்துக்காக கையப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பிசிசிஐ சார்பில் ரூ.331 கோடி செலவில் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. அதாவது மொத்தமாக பார்த்தால் ரூ.451 கோடியில் வாரணாசியில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.

இந்த மைதானத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. இந்த மைதானத்தில் பல நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. ஸ்கோர் போர்டு, வீரர்களின் ஓய்வறை, செய்தியாளர் சந்திப்பு பகுதி உள்பட ரசிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.

மேலும் இந்த கிரிக்கெட் மைதானம் என்பது கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட உள்ளது. அதாவது கடவுள் சிவனை பிரதிபலிக்கும் வகையில் இங்கு சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதன்படி ஸ்டேடியத்துக்கான மின்விளக்கு திரிசூலம் வடிவில் அமைக்கப்பட உள்ளது. மேலும் மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்து இருக்கும் கேலரி என்பது மேற்கூரை பிறை நிலா வடிவில் அமைக்கப்பட உள்ளது. அதோடு உடுக்கை வடிமும் இடம்பெற உள்ளது.

இதற்கிடையே தான் வாரணாசியில் அமைக்க உள்ள கிரிக்கெட் மைதானத்தின் மாதிரி படங்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதனை பல நெட்டிசன்கள் இணையதளங்களில் பகிர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications