மோடியுடன் மைத்ரிபால சிறிசேன சந்திப்பு- தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்!
டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு பிரதமர் நரேதிரமோடி நேற்று இரவு விருந்தளித்தார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்தையின் போது, இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் குறித்து இருவரும் விவாதித்தனர்.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைத்ரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் மூலம் இலங்கையில் நடைபெற்றுவரும் உள்கட்டமமைப்பு பணிகள் மற்றும் இருநாடுகளிடையேயான வர்த்தகம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, இலங்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவமாக நடத்தப்படுவதற்காக சிறிசேனவுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜையினியில் இன்று நடைபெறும் கும்பமேளா நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிறிசேன பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து சாஞ்சி நகரில் உலகப் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுகிறார். இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை சிறிசேன திறந்து வைக்கிறார். பின் பெங்களூர் வழியாக இலங்கைக்கு சிறிசேன திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications