வாயை விட்டு வாங்கி கட்டிய மோடி.. சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டதற்கு மலையாளிகள் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டு பேசி, வாக்குகளை அள்ள நினைத்த பிரதமர் மோடிக்கு, மலையாளிகள் கடும் கோபத்தை பரிசாக அளித்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த ஞாயிறன்று கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் கேரள பழங்குடி சமூகத்தின் மத்தியில் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியாவை விட மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

இது கேரளாவிலுள்ள பெரும்பான்மையான மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களை உயர்வாகவே மதிக்கும், கேரள மக்களால், வன்முறை, வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவுடன் தங்கள் மாநிலத்தை ஒப்பிட்டு பேசியதை தாங்க முடியவில்லை.
இது குறித்து அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால் நடித்த மலையாள படமான நரசிம்ஹாவில் உள்ள பிரபல வசனமான "நீ போ மோனே தினேஷா" என்பதை கொஞ்சம் மாற்றி "போ மோனே மோடி"(PoMoneModi) என்ற டுவிட்டர் ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து மலையாளிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications