மழை நீரை சேமிக்கும் விழிப்புணர்வு வர வேண்டும்.. மன் கி பாத் உரையில் மோடி
டெல்லி: மழை நீரை சேமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றுவது வழக்கம். இன்றும் ரேடியோ மூலம், "மன் கி பாத்"என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மோடி பேசியதாவது:

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மிகப்பெரிய நீராதாரமான கங்கையை சுத்தப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்களில் மழைநீரை சேமிப்பது,பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வறட்சியை கருத்தில் கொண்டு பயிரிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். நாட்டில் நிலவும் வறட்சி கவலை அளிக்க செய்கிறது. பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குடிநீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வருடத்தில் மழைக்காலம் சிறப்பானதாக இருக்கும் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications