பாதுகாப்பையும் மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து மோடி ஆபீஸுக்கு சென்ற வாலிபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 25 வயது வாலிபர் ஒருவர் பாதுகாப்பை எல்லாம் தாண்டி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலத்திற்கு சென்றுள்ளார்.

குஜராத்திற்குள் ஊடுருவிய 10 தீவிரவாதிகள் டெல்லிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நடந்த சம்பவம் பாதுகாப்பு எந்த அழகில் உள்ளது என்பதை தெரிய வைத்துள்ளது.

PM Modi's office breached, youth strays into Parliament

பிரதீப் என்ற 25 வயது வாலிபர் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்பையும் மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த அவர் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலத்திற்கு அருகே செல்லும் வரை அவரை யாரும் பார்க்கவில்லை.

அதன் பிறகே அவரை பிடித்து விசாரித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். எப்படி அவர் நாடாளுமன்றத்திற்குள் இவ்வளவு எளிதில் நுழைந்தார் என போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்றத்திற்குள் ஒரு வாலிபர் அசால்டாக நுழைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+