பிரதமர் சொல்வது பொய்.. இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது.. லடாக்கில் நின்று சீறிய ராகுல்

Subscribe to Oneindia Tamil

லடாக்: சீனா நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது பொய் எனவும் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாகவும் லடாக்கில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 13,682 அடி உயரத்தில் உள்ள பான்காங் ஏரி பகுதிக்கு ராகுல் காந்தி சென்றார். இந்த ஏரியின் 50 சதவீத பகுதி சீன எல்லையிலும் 40 சதவீத பகுதி இந்திய பகுதியிலும் உள்ளன. 10 சதவீத பகுதி சர்ச்சைக்குரிய இடமாக உள்ளது. இந்த சூழலில் தான் நேற்று ராகுல் காந்தி லே நகரில் இருந்து பைக்கில் பான்காங் ஏரி பகுதிக்கு சென்றார்.

PM Modi said not an inch of land was taken away, but this is not true, Rahul raises China issue

பான்காங் ஏரி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் ராகுல் நேற்றிரவு தங்கினார். இந்த நிலையில், இன்று பாங்காங் ஏரி அருகே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்திய நிலப்பரப்புகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: இந்தியாவின் ஒரு இன்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் சொல்கிறார். ஆனால், இதில் உண்மையில்லை.

நீங்கள் இங்கு இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இதை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அண்டை நாட்டால் நமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் லடாக் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார். ராகுல் காந்தியின் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பவார் கேரா தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "வேறு எந்த பிரதமராக இருந்தாலும் இந்த பகுதிக்கு சென்று சீனாவுக்கு ஒரு வலுவான மேசேஜ் கொடுத்து இருப்பார்.

ஆனால், நமது பிரதமர் மோடி நற்சான்றிதழ் கொடுத்து கொண்டு இருக்கிறார். சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் மிகவும் தேவையான ஒரு செய்தியை அனுப்பிய ராகுல் காந்திக்கு நன்றி. இது நமது நிலம்"என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ராகுல் காந்தி நேற்று லே நகரில் இருந்து பைக்கில் பான்காங் ஏரி பகுதிக்கு சென்றது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

ராகுல் காந்தி பைக் ஓட்டி செல்லும் படஙக்ள் சமூக வலைதளஙக்ளில் டிரெண்ட் ஆகின. தொடர்ந்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: பான்காங் ஏரி பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறேன். உலகின் மிக அழகான பகுதிகளில் இதுவும் ஒன்று என எனது தந்தை தெரிவித்து இருக்கிறார்" என்று பதிவிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+