For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பாரத் மாதா கி ஜெய்' முழக்கம் கேட்டால் மம்தா பானர்ஜி கோபப்படுவார்...பிரதமர் மோடி தாக்கு!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல், வன்முறை, ஜனநாயகம் மீதான தாக்குதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

'பாரத் மாதா கி ஜெய்' ன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டால் கூட அவர் கோபப்படுவார் என்று பிரதமர் கூறினார்.

PM Modi says Mamata will get angry if she hears the slogan Bharat Mata Ki Jai

பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் அசோம் மாலா திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டம் அசாமின் சாலை உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அசாமில் தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி, அங்கு இருந்து மேற்கு வங்க மாநிலம் சென்றார். மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-

உத்தரகண்ட் மாநிலம் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக மாநில முதல்வர் திரிவேந்திர ராவத் உடன் பேசினேன். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் என்டிஆர்எஃப் அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல், வன்முறை, ஜனநாயகம் மீதான தாக்குதல் புதுப்பபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மதிப்பை சிதைக்க சிலர் முயற்சி...அரசியல் கட்சிகள் காரணம்...மோடி தாக்கு இந்தியாவின் மதிப்பை சிதைக்க சிலர் முயற்சி...அரசியல் கட்சிகள் காரணம்...மோடி தாக்கு

வங்காளத்தில், உங்கள் உரிமையைப் பற்றி தீதி (மம்தா பானர்ஜி) யிடம் கேட்டால் அவர் விரக்தி அடைகிறார். 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டால் கூட அவர் கோபப்படுவார். மிட்னாபூர் புனித நிலத்தை பார்வையிட முடிந்ததற்கு நான் பாக்கியவானாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minister Modi has said that the Mamata Banerjee regime has renewed its attack on corruption, violence and democracy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X