ஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ!

பிரதமர் மோடி தனது பாதுகாவலர் ஒருவரை கோபமாக திட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேமராவை மறைத்த செக்யூரிட்டி! திட்டிய மோடி

    கேதார்நாத்: பிரதமர் மோடி தனது பாதுகாவலர் ஒருவரை கோபமாக திட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

    பிரதமர் மோடி தற்போது இரண்டு நாள் ஆன்மீக பயணத்தில் இருக்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. பிரதமர் மோடி இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.

    PM Modi shouts at security for blocking camera view - Viral Video

    பிரதமர் மோடி மொத்தம் 120க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களை கடந்த ஒரு மாதத்தில் நடத்தி இருக்கிறார். இந்திய தேர்தலில் அதிக பிரச்சார கூட்டங்களை நடத்தியது இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பத்ரிநாத்தில் உள்ளார்.

    பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சென்றார். அங்கு வழிபாடு நடத்திய இவர், பின் குகையில் தியானம் செய்தார். பின் இன்று அதிகாலை பத்ரிநாத் வந்தார். அங்கும் வழிபாடு நடத்திவிட்டு மக்களை சந்தித்தார்.

    அவர் மக்களை சந்திக்கும் போது அதை வீடியோ எடுக்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து திசைகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மோடியின் பாதுகாவலர் ஒருவர் அவரை பாதுகாப்பதற்காக கொஞ்சம் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

    இதனால் ஒரே ஒரு கேமரா மட்டும் அவருக்கு தெரியாமல் இடைஞ்சலாக இருந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த மோடி, உடனே, அந்த பாதுகாவலரை கோபமாக திட்டினார். அதன்பின் பாதுகாவலர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

    இது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மோடி இப்படி கோபப்பட்டு செயல்பட்டது பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+