மேடம் துஸாட்ஸ் மியூசியத்தில் விரைவில் "மிஸ்டர் மோடி"
டெல்லி: பிரபல மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் இந்தியப் பிரதமர் மோடியின் சிலையும் இடம் பிடிக்கப் போகிறது.
லண்டனில் கடந்த 1836ம் ஆண்டு திறக்கப்பட்ட மெழுகுச் சிலை அருங்காட்சியம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. இதில், பிரபலங்கள் பலரின் மெழுகுச் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியின் சிலையும் அந்த அருங்காட்சியத்தில் இடம் பிடிக்கப்போகிறது.

அளவெடுக்கும் பணி...
இதற்காக அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மெழுகுச் சிலை வடிவமைப்பாளர்கள் குழு சமீபத்தில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். அப்போது மோடியின் உடல் அளவுகள், முடியின் நிறம் உள்ளிட்டவை குறித்துக் கொள்ளப்பட்டன.

வீடியோ...
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மோடியின் முகம், கை, கண், முடி என தனித்தனியே அளவு எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நமஸ்தே...
இந்த மெழுகுச் சிலைக்கு மோடியின் பேவரைட் உடையான க்ரீம் கலர் குர்தா, ஜாக்கெட்டோடு அணிவிக்க இருக்கிறார்களாம். அதோடு ‘நமஸ்தே' அதாவது வணக்கம் சொல்லும் போஸில் மோடியின் சிலை உருவாக்கப்பட இருக்கிறதாம்.

சிங்கப்பூரில்...
இந்த மெழுகுச் சிலையானது லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் பாங்காங் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட இருக்கிறது.

மகிழ்ச்சி...
ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்திற்கு மூன்றிற்கும் மேற்பட்ட முறை சென்று வந்துள்ளாராம் மோடி. அப்போதெல்லாம் மற்ற மெழுகுச் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது அவரது வழக்கமாம். தற்போது தனது மெழுகுச் சிலையும் அங்கே இடம் பெறப் போவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின் சிலைகள்...
இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி போன்ற மறைந்த தலைவர்களின் மெழுகுச் சிலைகளும், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கரீனா கபூர், மாதுரி தீட்சித் மற்றும் கிரிக்கெட் கடவுள் சச்சின் ஆகியோரது மெழுகுச் சிலைகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications