Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரேந்திர மோதி போற்றிய திருவள்ளுவர் முதல் பாரதி வரை - என்ன பேசினார்? 20 முக்கிய அம்சங்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் புதிய எம்ய்ஸ் மருத்துவமனைகள், தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, திருவள்ளுவர் முதல் பாரதிவரை தமிழின் பெருமை மற்றும் தேச வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.

சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகம் மற்றும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோதி காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.

PM Modi

தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 1,250 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இதற்காக மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 2,145 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

ரூ. 24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் புதிய வளாகம், இதுவரை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடங்கும்போது தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் கூறி உரையாற்றினார் நரேந்திர மோதி. அதில் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

22 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

இந்தியாவில் மருத்துவ கல்விக்கான அணுகல் பிரச்னையாகவே இருந்தது. நாங்கள் பதவியேற்றது முதல், இந்த இடைவெளியை நிவர்த்தி செய்து வருகிறோம். 2014இல் நம் நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 596 மருத்துவ கல்லூரிகளாக உயர்ந்துள்ளது. இது 54 சதவீதம் அதிகமாகும்.

2014ஆம் ஆண்டில், இந்தியாவில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 82 ஆயிரம் ஆக இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் இடங்களாக உயர்ந்துள்ளது. இது சுமார் 80 சதவீதம் அதிகமாகும்.

2014ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. ஆனால் 2014க்குப் பிறகு, அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மருத்துவ கல்வித் துறையை வெளிப்படைத் தன்மையுடன் மாற்றும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. சில நாட்களுக்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை நான் திறந்து வைத்தேன். எனவே, எனது சாதனையை நானே முறியடிக்கிறேன்.

பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது முக்கியம். அந்த வகையில், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ச்சித் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் இவை. ஒரு கல்லூரி நீலகிரி மலை மாவட்டத்தில் உள்ளது. PM-Jan Aushadhi Yojana என்ற திட்டத்தின்படி அரசு மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைப்பதில் புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற 8000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த திட்டம் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக உள்ளது. மருந்துகளுக்கு செலவிடும் பணம் வெகுவாக குறைந்துள்ளது.

பெண்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த, 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை தமிழக மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடம் தமிழ்ப் படிப்பை மேலும் பிரபலப்படுத்தும். செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க உத்தேசித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் செழுமையால் நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.

தமிழ் ஆர்வம்

பண்டைய காலத்தின் வளமான சமூகம் மற்றும் கலாசாரத்திற்கான வாய்ப்பாக நமக்கு இருப்பது சங்க படைப்புகள்தான். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்கான 'சுப்பிரமணிய பாரதி இருக்கை' அமைத்த பெருமையும் நமது அரசுக்கு உண்டு. எனது நாடாளுமன்றத் தொகுதியில் அது அமைந்திருப்பது தமிழ் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும்.

நான் குஜராத்தியில் திருக்குறளின் மொழிபெயர்ப்பைத் தொடங்கியபோது, ​​இந்த காலத்தால் அழியாத படைப்பின் செழுமையான சிந்தனைகள் குஜராத் மக்களுடன் இணைந்திருப்பதையும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்தேன்.

பள்ளிகளில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிகளில் கல்வி கற்பதை அரசு ஊக்குவிக்கிறது. பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளை இந்திய மொழிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு பல பிரகாசமான பொறியாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் பலர் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிகத் தலைவர்களாக மாறியுள்ளனர்.

STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகிய படிப்புகளில் தமிழ் மொழி உள்ளடக்கத்தை வளர்க்க உதவுமாறு இந்த திறமையான தமிழ் புலம்பெயர் மக்களை நான் அழைக்கிறேன்.

ஆங்கில மொழி ஆன்லைன் படிப்புகளை தமிழ் உட்பட பன்னிரண்டு வெவ்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்புக் கருவியை அரசு உருவாக்கி வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையே நமது பலம். ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத் என்ற வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை மேம்படுத்தி நமது மக்களை நெருக்கமாக்க முயல்கிறோம்.

ஹரித்வாரில் ஒரு சிறு குழந்தை திருவள்ளுவர் சிலையைப் பார்த்து, அவரது பெருமையைப் பற்றி அறிந்ததும், ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரதத்தின் விதை அந்த இளம் மனதில் பதிகிறது. ஹரியாணாவைச் சேர்ந்த ஒரு குழந்தை கன்னியாகுமரியில் உள்ள பாறை நினைவிடத்திற்குச் சென்றபோது இதேபோன்ற உணர்வு காணப்படுகிறது.

தமிழ்நாடு அல்லது கேரளாவைச் சேர்ந்த குழந்தைகள் வீர் பால் திவாஸ் பற்றி அறிந்து கொள்ளும்போது, ​​அவர்கள் சாஹிப்ஜாதேஸின் வாழ்க்கை மற்றும் செய்தியுடன் தொடர்பு கொள்கிறார்கள். தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த இந்த மண்ணின் மகத்தானவர்கள், தங்களுடைய லட்சியத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள். இதுபோன்றவர்களையும் பிற கலாசாரங்களையும் கண்டறிய முயற்சி செய்வோம். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.

கொரோனா அறிவுரை

நிறைவாக, கோவிட்-19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் குறிப்பாக முக கவசம் அணியும் ஒழுக்கத்தை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் டோஸ் போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். முதியோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்ற மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, 135 கோடி இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்டு, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளடக்கிய மற்றும் தரமான சுகாதார சேவைகளை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நமது வளமான கலாச்சாரத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, வருங்கால சந்ததியினருக்கு அமிர்த காலின் அடித்தளத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். அது நம் அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரட்டும் என்று மோதி பேசினார்.

முன்னதாக, புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி, பின்னர் கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜா் மணிமண்டபம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியம். ஒவ்வொரு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இது உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தை நோக்கிய பாதையில் புதிய சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதும் முக்கியம் என்று பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+