'நீங்க எனக்காக கடுமையாக இறங்கி வேலை பார்த்தீங்க'.. மீடியாக்களுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி
வாரணாசி: வாரணாசியில் பாரதிய ஜனதா நடத்திய பேரணிக்காக கடுமையாக உழைத்ததாக மீடியாக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக நேற்று அவர் வந்தார். தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திரமோடி வேட்பு மனுதாக்கல் செய்தார்

இந்நிலையில் நேற்று வாரணாசியில் மிக பிரம்மாண்டமான பேரணியை பிரதமர் மோடி நடத்தினார். திறந்தவெளி வாகனத்தில் வாரணாசி நகரத்தின் சாலைகளை வந்த மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 15 மணிநேரம் நடந்த இந்த பேரணி குறித்து இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மோடி.
இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில், "வாரணாசி மக்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் என்னை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிர்வதித்ததை போலவே இப்போது ஆசீர்வதித்துள்ளார்கள். மோடிதான் வெற்றி பெறுவார், அவர்களை நம்பாதே, மோடிக்கே ஓட்டு என மக்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள்.
நான் மீடியா நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வியாழக்கிழமை மதியம் முதல் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து உள்ளீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்யத்துடன் இருந்து இதேபோல் கடுமையாக உழைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications