41.7 மில்லியன் பேர் பாலோ செய்யும் பேஸ்புக் ஹீரோ “நரேந்திர மோடி”

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பேஸ்புக்கில் அதிகம் பேர் பின்பற்றப்பட்ட உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் உள்ளிட்ட திட்டங்களில் அதிகம் பேர் பங்கேற்றுள்ளனர் என பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi, the most followed world leader on Facebook, says latest data

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான போது மோடியை 14 மில்லியன் பேர் பின்பற்றினர். 3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த எண்ணிக்கை 41.7 மில்லியனாக உள்ளது. அதேநேரத்தில் உலகளவில் பிரசிதிபெற்ற தலைவரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவல்களில் இன்டராக்ஷன்களை பொருத்த வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தப்படியாக மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, வி.கே. சிங், பியூஷ் கோயல் மற்றும் அருன் ஜேட்லி ஆகியோர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+