அலிகார் முஸ்லீம் பல்கலை. நூற்றாண்டு விழா... பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
அலிகார் : உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடிகலந்து கொள்ள உள்ளார்.
இந்த விழாவை அரசியல் அரசியல் ஆக்க வேண்டாம் என அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர் தெரிவித்து உள்ளார்..

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.இந்த பல்கலைக்கழகத்தின் நுாற்றாண்டு விழா வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார். அவரும், பிரதமர் மோடியும் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் அலிகார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சம்மதித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா பல்கலையின் வளர்ச்சிக்கும், இங்கு படிக்கும் மாணவர்கள் வளர்ச்சிக்கும் உதவும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. எனவே சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அலிகார் பல்கலைக்கழக மாணவர்களின் செயல்பாடுகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கபடும். இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக தலைவர்கள் அடிக்கடி கூறி வந்தனர். கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் உள்ள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலிகார் பல்கலைக்கழக மாணவர் விடுதி வளாகத்தில் பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னாவின் உருவப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது கடும் சர்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications