மக்களின் இதயத்தை வெல்ல வந்து இருக்கிறேன்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு.. காஷ்மீரில் முழங்கிய மோடி
காஷ்மீர்: பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து பேசிய மோடி, நாட்டின் கிரீரமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது என்று பேசினார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு விடும் என்பதால், அதற்கு முன்பாக வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டியும் வருகிறார்.

அந்த வகையில் இன்று பிரதமர் மோடி காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பாஜகவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பத்திரிகையாளர்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மோடி வருகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஷ்மீர் பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் ஏற்கனவே பாஜக கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம் உணவு வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது.
சிறப்பு பேருந்துகள்: சிறப்பு அந்தஸ்து ரத்தினால் காஷ்மீர் முன்னேற்றம் பெற்றுள்ளதாக பாஜக கூறி வருவதால் தங்களுக்கு அங்கு ஆதரவு பெருகியுள்ளதை காட்டும் விதமாக இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்க வேண்டும் என்று பாஜக விரும்பி இதற்கான ஏற்பாடுகளை செய்தது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ரூ.6,400 கோடி திட்டம்: வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்று இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் ரூ6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநாகரின் ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதேபோல் அங்கிருந்தபடியே நாடு முழுவதும் யாத்திரை மற்றும் சுற்றுலா திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவக்கிரக ஆலய திட்டம், சுற்றுலா மேம்பாடு திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, " மக்களின் இதயத்தை வெல்ல இங்கு வந்திருக்கிறேன். நாட்டின் கிரீடம் ஜம்மு காஷ்மீர்" என்று பேசினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications