தெலுங்கானாவின் முதலாவது முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் 29வது மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானாவுக்கும் அதன் முதலாவது முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா புதிய மாநிலம் இன்று அதிகாலை உதயமானது. இதையொட்டி தெலுங்கானா முழுவதும் விடிய விடிய கொண்டாட்டம் களைகட்டியது.

PM Modi welcomes Telangana

இதன் பின்னர் இன்று காலை அம்மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களுடன் பதவியேற்றனர்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Congrats to K Chandrasekhar Rao Garu on taking oath as Telangana's 1st CM. My best wishes to people for the state's development journey.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/473300902338519041">June 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் தெலுங்கானா மக்களுக்கும் புதிய முதல்வருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா புதிய மாநிலத்தைப் பெற்றுள்ளது. 29வது மாநிலமாக உதயமாகி இருக்கும் தெலுங்கானாவை நாம் வரவேற்போம்.

நமது வளர்ச்சிப் பயணத்தில் தெலுங்கானாவும் இணைந்து கொள்ளும். எத்தனையோ போராட்டங்கள், தியாகங்களுக்குப் பின்னர் தெலுங்கானா உதயமாகி உள்ளது. தெலுங்கானாவுக்காக போராடியவர்களுக்கு இத்தருணத்தில் நாம் மரியாதை செலுத்துவோம்.

தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கானா மக்களுக்கும் அரசுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+