125 கோடி மக்களின் ஆசிர்வாதத்தால் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆவார்.. அமித் ஷா நம்பிக்கை
உஜ்ஜைனி: பிரதமர் மோடியின் பெயரை மக்கள் எழுப்புவது வெறும் முழக்கம் அல்ல என்றும் அது 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி இதுவரை 5கட்டங்களாக நடந்து முடிந்துவிட்டது. 6ம் கட்ட மற்றும் 7 கட்டமாக வரும் மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மோடி பிரதமராவார்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மக்களின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராவர்.

மக்களின் ஆசிர்வாதம்
நான் இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிட்டேன். எங்கு வாக்கு கேட்க சென்றாலும், மக்கள் மோடி, மோடி என அவர் பெயரையே உச்சரிக்கிறார்கள். அவர்களது உச்சரிப்பு வெறும் முழக்கமல்ல. 125 கோடி இந்தியர்களின் ஆசிர்வாதம். எனவே வரும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.

மோடி உழைக்கிறார்
பிரதமர் மோடி கடந்த 20 ஆண்டுகளில் ஒரு முறை கூட விடுமுறை எடுத்தது இல்லை. தினமும் 18 மணி நேரமும் உழைக்கிறார். ஆனால் இதற்கு மாறாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோடைக் காலங்களில் வெளிநாடுகளுக்கு ஒய்வெடுக்க சென்று விடுகிறார்.

வீரர்கள் தலைகள் துண்டிப்பு
மோடியின் கையில் நாடு இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்கும் எனவே அவருக்கு வாக்களியுங்கள். சோனியா-மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நமது ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதேபோல் சோனியாவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்" இவ்வாறு கூறினார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications