மோடி கையை நீட்டினால்.. அந்த கிளி ஏறவே இல்லையே.. ஏன்?.. வைரல் வீடியோ!

பிரதமர் கையில் ஏற மறுத்துள்ளது ஒரு கிளி

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: பிரதமர் மோடி கையை நீட்டினால், அந்த கிளி ஏறவே இல்லையாம்.. மறுத்து பின்வாங்கி சென்றுவிட்டது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

குஜராத்தில் ஒரு தேசிய பூங்காவில் பச்சை கிளிகளுடன் பிரதமர் மோடி விளையாடும் காட்சி சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.. அதேபோல, இன்னொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.

Pm Modi with parrots in gujarat and video goes on viral

பெரிய பூங்காவினில் நிறைய வண்ண வண்ண கிளிகள் உட்கார்ந்துள்ளன.. மோடி அந்த பக்கமாக வரும்போது ஒரே ஒரு கிளி மட்டும் அங்கிருந்த குட்டி சுவற்றின்மேல் உட்கார்ந்திருந்தது.

அதை பார்த்த மோடி, அந்த கிளி அருகில் சென்றார்.. தன் கையில் ஏற்றி கொள்வதற்காக கிளி முன்பு கையை நீட்டினார்.. ஆனால் அந்த கிளி என்ன நினைத்ததோ தெரியவில்லை.. அவர் கையில் எறவே இல்லை.. அத்துடன் பின்வாங்கி கொண்டு சற்று நகர்ந்து நகர்ந்து வந்தது.

அப்போதும் கையை நீட்டிக் கொண்டே இருந்த மோடி, பிறகு ஏமாற்றமடைந்து அங்கிருந்த மற்ற கிளையை வேடிக்கை பார்த்தார்.. அதற்குள் கிளிக்கு பயிற்சி தரும் ஒரு பெண் ஓடிவந்து, மோடி கையில் ஏற மறுத்த கிளியை தன் கையில் ஏந்தி கொண்டு, பிறகு மோடி கையில் அதை ஏற செய்தார்.

அதன்பிறகே அந்த கிளியை தன் கையில் ஏற்றி கொண்டார் மோடி... கிளி பிரதமர் கையில் ஏற மறுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் இப்போது படுசூடாக பரவி வருகிறது... அந்த கிளி எதற்காக ஏற மறுத்திருக்கும்?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+