Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலில் ராகுல்.. அடுத்து பிரதமர் மோடி.. அடுத்தடுத்து விமானம் புறப்படுவதில் சிக்கல்! ஜார்கண்டில் பரபர

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அங்குப் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே பிரச்சாரம் முடித்துக் கொண்டு அவர் டெல்லி திரும்பவிருந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதேபோல அங்கு ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி அளிப்பதில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு எதிர்க்கட்சியாக பாஜக களத்தில் உள்ளது.

jharkhand assembly election 2024 jharkhand bjp politics

அங்கு இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட்: இதன் காரணமாகப் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்குப் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்ப இருந்தார். இருப்பினும், அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பிரதமர் மோடி டெல்லி திரும்புவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் வரை விமானம் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும் என்பதால் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் இப்போது அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

விமான கோளாறு: விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், பிரதமர் மோடியும் விமானத்தில் ஏறியிருந்தார். அப்போது தான் விமான கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானத்தை தியோகரில் நிறுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் செல்லும் நிலையில், மறுபுறம் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் முயற்சிகளும் நடந்து வருகிறது.

ஜார்க்கண்டில் பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் ஆண்டு விழா ஜன்ஜாதிய கவுரவ் திவாஸாக கொண்டாடப்படும் நிலையில், ஜார்க்கண்டில் இரண்டு இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராகுல் ஹெலிகாப்டர் கிளம்ப அனுமதி கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ராகுல் காந்தி: அதாவது பிரதமரின் விமானம் கோளாறு ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்ப ஹெலிகாப்டரில் ஏறிவிட்டார். இருப்பினும், ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி கிடைக்கவில்லை. சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவர் ஹெலிகாப்டரிலேயே காத்திருந்தார். அதன் பின்னரே ஏர் டிராபிக் கன்ட்ரோல் ராகுல் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி அளித்தது.

ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இப்படிச் செய்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. அருகில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடந்த நிலையில், அவருக்கு முன்னுரிமை அளித்தே ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

ஜார்க்கண்ட் தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 81 சீட்கள் உள்ளது. அதில் 43 தொகுதிகளில் கடந்த நவ. 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு வரும் நவ. 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+