தப்பே இல்லை.. என் நண்பர் மோடியை தாராளமாக பின்பற்றலாம்! புகழ்ந்து தள்ளிய புதின்! திரும்பும் நாடுகள்
மாஸ்கோ: இந்தியாவின் ‛மேக் இன் இந்தியா' திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த திட்டத்தை உருவாக்கியது நாமாக இல்லாவிட்டாலும் கூட நம் நண்பர்கள் தான் உருவாக்கி உள்ளனர். அதனை நாம் பின்பற்றலாம். அதில் எந்த தவறும் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் சிறந்த நண்பனாக ரஷ்யா உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது இருநாடுகள் இடையேயான தொழில் வர்த்தகம் தான். ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை ரஷ்யாவில் இருந்து இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது.

இதனால் ரஷ்யாவும், இந்தியாவும் சிறந்த தோழமை நாடுகளாக உள்ளன. நரேந்திர மோடி பிரதமாக பொறுப்பேற்ற பிறகும் இருநாடுகள் இடையேயான பந்தம் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே நல்ல நட்பு உள்ளது.
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீரென பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார். ரஷ்யாவின் அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஏஎஸ்ஐ எனும் மூலாபய முன்முயற்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளாடிமிர் புதின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் இந்தியாவையும், பிரதமர் மோடியின் திட்டத்தையும் புகழ்ந்து பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள நண்பர்களும், எனக்கு நெருக்கமான நண்பருமான பிரதமர் மோடி ‛மேக் இன் இந்தியா' திட்டத்தை தொடங்கினர். இந்த திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் உண்மையிலேயே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் என்பது உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிப்பது, அசெம்பிள் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக தொழில்ரீதியாகவும் இந்திய அரசு, நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இந்தியா ஈர்க்க முயற்சித்துள்ளது. இத்தகைய சிறப்பான திட்டத்தை நாம் உருவாக்காவிட்டாலும் கூட அதனை நம் நண்பர்கள் தான் உருவாக்கி உள்ளனர். அதனால் அதனை நாம் பின்பற்றலாம். அதில் எந்த தவறும் இல்லை. மேலும் இத்தகைய நடவடிக்கை என்பது நமக்கு எந்த தீமையையும் ஏற்படுத்தாதது.
இதனால் நாமும் உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை இன்னும் ஊக்குவித்து திறமையாக சந்தைப்படுத்துதல் வேண்டும். குறிப்பாக நவீன வடிவமைப்புடன் பல்வேறு புதிய தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்து நமது தயாரிப்புகளை மேம்படுத்த வேண்டும். இது நிச்சயம் நம் நாட்டின் வளர்ச்சிக்கான ஆதாரமாக இருக்கும்'' என இந்தியாவை சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஊக்கமளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications