சனாதனிகளை இழிவுபடுத்தியவர்களை தேர்தலில் தோற்கடிப்போம்.. பீகாரிலும் திமுகவை தாக்கிய பிரதமர் மோடி!
பாட்னா: சனாதனத்தை இழிவுபடுத்தியவர்களை லோக்சபா தேர்தலில் தோற்கடிப்போம் என பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி திமுகவை விமர்சித்தார்.
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி அண்மையில் தென்னிந்தியாவில் உ.பி. மாநிலத்தவர் இழிவுபடுத்தப்படுவதாக விமர்சித்திருந்தார். மேலும்,இந்தியா கூட்டணி கட்சிகளான தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள் உ.பி. மக்களுக்கு எதிராக இழிவாக விமர்சிக்கின்றனர். உங்களை இழிவாக பேசும் "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த தென்னிந்தியா- வட இந்தியா பிரிவினை பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஒடிஷாவில் பேசிய பிரதமர் மோடி, ஜெகநாதர் கோவிலின் புதையல் சாவியை பிஜேடியின் விகே பாண்டியன் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்? என விமர்சித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் பீகாரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவர்களுக்கு கடினமான வேலை என்பது என்ன என்றே தெரியாது. ஜூன் 4-ந் தேதிக்கு பின்னர் எனக்கு ஓய்வளிக்கப் போவதாக அவர்கள் பேசுகிறார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓய்வே தரக் கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன். மோடியை இழிவுபடுத்துவது, விமர்சிப்பதுதான் இவர்களது வேலை. இதுதான் பிரசாரம். சனாதனிகளுக்கு எதிராகப் பேசுகிற சக்திகளை தோற்கடித்தே தீருவோம் என்றார். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் சனாதனிகளை இனப்படுகொலை செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜக பொய் பிரசாரம் செய்தது. இதனையே இன்று வரை பிரதமர் மோடியும் பேசி வருகிறார். பீகார் தேர்தல் பிரசாரத்டில் திமுக, சனாதன எதிர்ப்பாளர்கள் குறித்து மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications