காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி- கங்கையில் புனித நீராடினார்!
வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்று பகல் 1 மணியளவில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி. முன்னதாக கங்கையில் புனித நீராடினார் பிரதமர் மோடி.

ரூ339 கோடியில் முதல் கட்டம்
பின்னர் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, மோசமான சுற்றுப்புறங்களைக் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது தொன்று தொட்டு நடந்து வந்த வழக்கமாகும்.

காசி விஸ்வநாதர் ஆலய வளாகத் திட்டம்
இந்த நிலையை மாற்றும் வகையில் காசி விஸ்வநாதர் ஆலய வளாக திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது காசி விஸ்வநாதர் ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதையை பக்தர்கள் எளிதில் அணுகும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 2019-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் அனைத்து நிலைகளிலும் பிரதமர் மோடி தீவிர ஆர்வம் காட்டி வந்தார். அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு, ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தார். மாற்றுத்திறனாளிகளும், எளிதில் வந்து செல்லும் வகையில் மாற்றங்களை அவர் தெரிவித்தார். இதற்காக சாய்தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

எப்படி செயல்படுத்தப்பட்டது?
இத் திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 23 கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாத்ரி சுவிதா மையங்கள், சுற்றுலா வசதி மையம், வேத மையம், நகர அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், உணவு விடுதிகள் உள்பட பல வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றியிருந்த 300-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை சுமூகமாக கையகப்படுத்துவதில் சுமார் 1400 கடைகாரர்கள், வாடகைதாரர்கள், இட உரிமையாளர்கள் ஆகியோரின் ஒத்தழைப்பும் பெறப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, அனைத்து பாரம்பரிய கட்டிடங்களையும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இப்படி பழைய கட்டிடங்களை இடிக்கும் போது, 40-க்கும் மேற்பட்ட பழமையான கோயில்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் முந்தைய அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல், அவை பாதுகாக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.

12 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
முன்பு 3000 சதுர அடிக்குள் சுருங்கியிருந்த வளாகத்தின் அளவை 5 லட்சம் சதுர அடி என்னும் பிரம்மாண்டமான பரப்பளவில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு இடையிலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தத் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி கால பைரவர் கோயிலுக்கு நண்பகல் 12 மணிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இன்று மாலை 6 மணிக்கு ரோ-ரோ படகில் பயணிக்கும் பிரதமர் மோடி, கங்கை ஆரத்தியை பார்வையிடுவார். நாளை மாலை சுமார் 3.30 மணியளவில், வாரணாசியில் சர்வேத மகாமந்திரில், சத்குரு சதாபல்தியோ விஹாங்கம் யோக் சன்ஸ்தான் 98-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர்கள், பீகார், நாகாலாந்து மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள் மாநாடும் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications