ஆஹா வாரணாசியில் மீண்டும் மோடி வெற்றி! 3-ஆவது இடத்தில் காங்கிரஸ்.. தொண்டர்கள் உற்சாகம்
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 2-ஆவது முறையாக போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்து வந்தார்.

தலைமை அலுவலகம்
இதனால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களை கட்சி அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி
இந்த நிலையில் அனைத்து சுற்றுகளின் முடிவில் நரேந்திர மோடி 5,45,056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவை விட 3.85 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் மோடி. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படடார். இதனால் வாரணாசியில் ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

புனித பயணம்
இவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும் ஆவார். இவர் 7-ஆவது கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்த நாள் கேதார்நாத், பத்ரிநாத்துக்கு புனித பயணம் மேற்கொண்டார்.

லோக்சபா தேர்தல்
அப்போது கேதார்நாத்தில் உள்ள மலையுச்சியில் தியானம் மேற்கொள்ள காவியுடையுடன் கையில் தடியுடன் 2 கி.மீ. தூரம் நடந்தே சென்றார். கடந்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி 5,81,023 வாக்குள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அரவிந்த் கேஜரிவால் 2,09, 238 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications