பிரதமர் மோடிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இத்ரிஸ் அலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடிக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று திரும்பிய பிறகு ஏன் பதான்கோட் விமானபடை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்? இது என் தனிப்பட்ட கருத்து என்றார்.

மேலும், மம்தா பானர்ஜியை சிறைக்கு அனுப்புவேன் என்று தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கவுதம் தெப்பிற்கு கண்டனம் தெரிவித்த இத்ரிஸ் அலி, இது போன்று மீண்டும் கூறினால் அவர் கை, கால்களை உடைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ், இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார். திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications