மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து பாதை மாற்றப்பட்ட மோடியின் விமானம்!
டெல்லி: மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் வான்வழிப் பாதையில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வர இருந்தது. ஆனால் மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து மாற்றுப் பாதையில் மோடியின் விமானம் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் ஜெர்மனியில் நேற்று இந்திய தூதரக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக கிழக்கு உக்ரைன் வான்வழியாக நாடு திரும்புவதாக இருந்தது. இந்த நிலையில்தான் கிழக்கு உக்ரைனில் 295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே ஜெர்மனியில் இருந்து மோடி பயணித்த விமானம் புறப்பட்டுவிட்டது. ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இருந்து கிழக்கு உக்ரைனை வந்தடைய 3 மணி நேரமாகும்.
இதனால் கிழக்கு உக்ரைன் வான்வழியாக வராமல் நடுவழியிலேயே மாற்றுப் பாதையில் மோடி பயணித்த விமானம் இயக்கப்பட்டு இந்தியா வந்தடைந்தது. இதேபோல் பிற நாட்டு விமானங்களும் கிழக்கு உக்ரைன்வான் வழியை பயன்படுத்தாமல் மாற்றுப் பாதையிலேயே இயக்கப்பட்டன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications