தளர்ந்தது இறுக்கம்... ஓபாமாவுக்கு அளித்த விருந்தில் 'சியர்ஸ்' செய்த மோடி-சோனியா காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிரும், புதிருமாக இருந்த பிரதமர் நரேந்திரமோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ஒபாமாவுக்காக, ஜனாதிபதி பிரணாப் அளித்த விருந்தின்போது ஜூஸ் கிளாஸ் வைத்து சியர்ஸ் சொல்லிக் கொண்டனர்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு ராஷ்டிரபதி பவனில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒபாமாவுக்கு இரவு விருந்தளித்தார்.

PM Narendra Modi and Sonia Gandhi toast during a banquet

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி, அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பல வி.ஐ.பிகளுக்கு பிரணாப் அழைப்புவிடுத்திருந்தார்.

இதையேற்று மோடியும், சோனியாவும் விருந்தில் பங்கேற்றனர். அப்போது இருவருமே பழ ஜூஸ் கிளாஸை எடுத்து பருக முற்பட்டனர். ஆனால், மோடியோ, தனது எதிரில் நின்று கொண்டிருந்த சோனியாவை நோக்கி, தான் வைத்திருந்த கிளாசை தூக்கி காண்பித்தார். சியர்ஸ் சொல்வது போல இருந்த இந்த சைகையை பார்த்து சோனியாவும் புன்முறுவல் செய்தார்.

நாட்டின் பொதுத்தேர்தலுக்கு முன்பாக சோனியாவையும், அவரது குடும்பத்தையும் கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்தவர் மோடி. பிரதமரான பிறகும் காங்கிரஸ் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று சூளுரைத்து வருபவர். இந்நிலையில், ஒபாமாவின் வருகை, மோடி-சோனியா நடுவேயான மனக்கசப்பை நீக்கியுள்ளதாகவே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+