Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல பிரதேசம் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

PM Narendra Modi to inaugurate Himachal Pradesh AIIMS on Oct.5

இமாச்சல பிரதேச சட்டசபையில் மொத்த இடங்கள் 68. இமாச்சல பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 45; காங்கிரஸ் 29; ஆம் ஆத்மி 1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என கூறியது சி வோட்டர் கருத்து கணிப்பு. கடந்த முறை 48.8% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 45.2%; காங்கிரஸ் கட்சி 41.7%-ல் இருந்து 33.9%; ஆம் ஆத்மி கட்சி 9.5% வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவித்திருந்தது அக்கருத்து கணிப்பு.

PM Narendra Modi to inaugurate Himachal Pradesh AIIMS on Oct.5

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேசம் செல்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாளை காலை 11.30 மணிக்கு பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர் பிலாஸ்பூரிலுள்ள லுஹ்னு மைதானத்துக்கு மதியம் 12.45 மணிக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பொதுநிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.

PM Narendra Modi to inaugurate Himachal Pradesh AIIMS on Oct.5

நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை, பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, 18 சிறப்பு மற்றும் 17 தனிசிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இந்த மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அங்கு சுற்றுச் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி என எதுவுமே நடைபெறவில்லை. ஆனால் அண்மையில் தமிழகம் வருகை தந்த பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிவடைந்துவிட்டதாக கூறியது பெரும் சர்ச்சையானது. இதனால் மருத்துவமனையை காணவில்லை என தமிழக எம்.பி.க்கள் கிண்டலாக குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+