மோடிக்கு ‘லுக்கிங் பிஸி, டூயிங் நத்திங்’ நோய்.. காங்கிரஸ் "கண்டுபிடிப்பு"!
டெல்லி: பிரதமர் மோடி ‘லுக்கிங் பிஸி, டுயிங் நத்திங்' நோயினால் அவதிப்படுகிறார் என காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
மூன்று நாடுகள் பயணமாக சீனா, மங்கோலியாவிற்குச் சென்ற பிரதமர் மோடி, தற்போது தென்கொரியா சென்றுள்ளார். தனது சீனபயணத்தின் போது, சீனவாழ் இந்திய மக்கள் மத்தியில் பேசிய மோடி, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு சூசகமாக பதிலளித்தார்.

அப்போது அவர், ‘‘மோடி எதற்காக இத்தனை நாடுகளுக்கு பயணம் செய்கிறார் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் கொஞ்சமாக வேலை செய்தால், விமர்சனம் வருவது இயல்பு. நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தாலும், விமர்சனம் வருவது இயற்கை. ஆனால் அதிகமாக வேலை செய்வதற்காக என்னை விமர்சனங்களால் தாக்குவது எனது துரதிர்ஷ்டம்'' என்றார்.
மேலும், ‘‘அதிகமாக உழைப்பதுதான் குற்றம் என்றால், நான் அந்த குற்றத்தை செய்து கொண்டே இருப்பேன். நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதி அதுதான்'' என மோடி உரையாற்றினார்.
இந்நிலையில், மோடியின் இந்த பதில் குறித்து காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி விமர்சித்துள்ளார். அதில் அவர், "தாங்கள் மிகவும் பிஸியாக வேலைசெய்கிறோம் என்று காட்டிக் கொள்பவர்கள், எந்தஒரு பணியும் செய்யவில்லை என்பதே உண்மையானது. இந்த நோய் ‘லுக்கிங் பிஸி, டுயிங் நத்திங்' (வேலை செய்வது போன்று தெரிவது, ஆனால் ஒன்றும் நடக்காது) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்த நோயினால் அவதிப்படுகிறார்' என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications