நவாஸ் ஷெரீபை சந்திப்பதை தவிர்க்க டாவோஸ் பயணத்தை ரத்து செய்தாரா மோடி?: மத்திய அரசு
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திப்பதை தவிர்க்க சுவிட்சர்லாந்தில் நடக்கும் பொருளாதார உச்ச மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் அன்று திடீர் என்று பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசினார். அவருக்கு தலைப்பாகை எல்லாம் பரிசளித்துவிட்டு வந்தார். ஆனால் மோடி ஷெரீபை சந்தித்த சில நாட்களில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் ஜனவரி 20ம் தேதி முதல் துவங்கி 23ம் தேதி வரை பொருளாதார உச்ச மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வதால் அவரை சந்திப்பதை தவிர்க்க மோடி டாவோஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,
பிரதமர் மோடி டாவோஸ் செல்வதாக திட்டமிடவே இல்லை. அப்படி இருக்கையில் அவர் எப்படி டாவோஸ் பயணத்தை ரத்து செய்திருக்க முடியும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications