பேரிடர் மேலாண்மை ஆணைய 7 உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்!
டெல்லி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 7 உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்தியில் மோடி அரசு பதவியேற்ற நிலையில் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. இதில் பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 7 உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆணையத்தில் சசிதர் ரெட்டி, கே.எம்.சிங், பி. பட்டாச்சார்யா, ஜே.கே.சின்ஹா, முசாஃபர் அகமது, கே. சலீம் அலி, மேஜர் ஜெனரல் ஜேகே பன்சால் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இதில் ஜே.கே. பன்சால் இந்த ஆணையத்தில் கடைசியாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர். இவர் சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்ததுடன் குஜராத்தில் நரேந்திரமோடிக்கு நெருக்கடியை கொடுத்த இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கையும் விசாரித்தவர்.
தற்போது உள்துறை செயலர் கோஸ்வாமி இந்த 7 உறுப்பினர்களையும் அழைத்து ராஜினாமா செய்யுமாறு நேற்று வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த ஆணையமானது பிரதமர் தலைமையிலானது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் இணை அமைச்சர்களுக்கு சமமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications