ஃபேஸ்புக், ட்விட்டரில் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல்!!
டெல்லி: சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் மத்திய அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
குஜராத் முதல்வராக பதவி வகித்த காலத்திலேயே ஃபேஸ்புக், ட்விட்டரில் தீவிரமாக இயங்கியவர் நரேந்திர மோடி. அதன் பின்னர் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களை முழு அளவில் பயன்படுத்தினார் நரேந்திர மோடி.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் கூட சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்தி வருகிறார் நரேந்திர மோடி. இந்த நிலையில் பொதுமக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அனைத்து மத்திய அமைச்சர்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய அமைச்சர்களில் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பிரகாஷ் ஜவ்தேகர், ஸ்மிருதி இரானி, உமாபாரதி, மேனகா காந்தி, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் முழுமையாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் இன்னும் சில அமைச்சர்கள் சமூக வலைதளம் பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் இருக்கின்றனர்.
மத்திய அமைச்சர்களும் அவர்களின் சமூக வலைதள முகவரிகளும்:
| அமைச்சர்கள் | ட்விட்டர் | ஃபேஸ்புக் |
| ராஜ்நாத்சிங் | @BJPRajnathSingh | RajnathSinghBJP |
| சுஷ்மா ஸ்வராஜ் | @SushmaSwaraj | SushmaSwarajBJP |
| அருண்ஜேட்லி | @arunjaitley | ArunJaitley |
| வெங்கையா நாயுடு | @MVENKAIAHNAIDU | - |
| நிதின் கட்காரி | @nitin_gadkari | - |
| சதானந்த கவுடா | @DVSBJP | sadanandagowda.official |
| உமாபாரதி | @UmashriBharti(English) | - |
| நஜ்மாஹெப்துல்லா | - | - |
| ராம்விலாஸ் பாஸ்வான | - | - |
| கல்ராஜ்மிஸ்ரா | - | KalrajMishra/info |
| மேனகா காந்தி | @ManekaGandhi1 | ManekaGandhijee |
| அனந்தகுமார் | @AnanthKumar_BJP | Ananthkumar.official |
| ரவிசங்கர் பிரசாத் | @rsprasad_bjp | ravishankarprasad.bjp |
| அசோக் கஜபதி ராஜு | - | - |
| ஆனந்த் கீதே | - | - |
| ஹர்சிம்ரத் கவுர் பாதல | - | Harsimratkaurbadal |
| நரேந்திரசிங் தோமர் | - | narendrasinghtomarbjp |
| ஜூயல் ஓரம | @jualoram | jual.oram.1 |
| ராதாமோகன்சிங் | @singhradhamohan | radhamohan.singh |
| தாவார்சந்த் கெஹ்லாட | - | thawarchand.gehlot |
| ஸ்மிருதி இரானி | @smritiirani | Smriti.Irani.Official |
| ஹர்ஷவர்தன் | @drharshvardhan | drharshvardhanofficial |
இணை அமைச்சர்கள்
| வி.கே.சிங | @Gen_VKSingh | generalvksingh |
| இந்தர்ஜித்சிங் ராவ் | @Rao_InderjitS | RaoInderjitSingh |
| சந்தோஷ்குமார் கங்வார் | - | SANTOSH-KUMAR-GANGWAR |
| ஸ்ரீபாத் யாசோ நாயக் | - | - |
| தர்மேந்திர பிரதான | @dpradhanbjp | DharmendraPradhanOdisha |
| சர்பானந்த சோனோவால் | @sarbanandsonwal | sarbananda.sonowalOFFICIALVIPACCOUNT |
| பிரகாஷ் ஜவ்தேகர் | @PrakashJavdekar | - |
| பியூஷ் கோயல் | @PiyushGoyal | PiyushGoyalBJP |
| ஜிதேந்திரசிங் | @DrJitendraSingh | - |
| நிர்மலாசீதாராமன் | @nsitharaman | - |
| சித்தேஸ்வரா | @GMSiddeswara_MP | - |
| மனோஜ் சின்ஹா | @manojsinhabjp | - |
| நிகால்சந்த் | @NihalchandBJP | - |
| உபேந்திர குஸ்வாஹா | @UK4Bihar | UpendraKushwahaRLSP |
| பொன். ராதாகிருஷ்ணன் | @Pon_bjp | - |
| கிர்ரென் ரிஜிஜூ | @Kiren_Rijiju | krijiju |
| கிருஷண்பால் | @kpgurjarbjp | - |
| சஞ்சீவ்குமார் பல்யான் | - | - |
| மன்ஷூக்பாய் வஸாவா | - | - |
| ராவ்சாகேப் ததராவ் தன்வே | - | - |
| விஷ்ணூ தியேசாய் | @SaiVishnudeo(Unverified) | - |
| சுதர்சன் பகத் | - | - |












Click it and Unblock the Notifications