20 பேர்.. 11,000 கொள்ளைகள்.. கோடிகளில் திருட்டு.. டெல்லி மெட்ரோவை கலக்கிய பெண் பவாரியாக்கள்
டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களை கைது செய்ய டெல்லி போலீஸ் சினிமா போலவே திட்டமிட்டு இருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக இதற்காக கடுமையாக உழைத்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் இப்போது 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களிடம் இருந்து 25 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது எல்லாமே டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் திருடப்பட்ட பணம் ஆகும்.

கொள்ளை எவ்வளவு
ஒவ்வொரு மாதமும் 1500க்கும் அதிகமான பிக் பாக்கெட்டுகள் இந்த பெண்கள் மூலம், டெல்லி மெட்ரோ ரயிலின் பெண்கள் கோச்சில் நடந்து இருக்கிறது. ஜனவரியில் மட்டும் அதிகமாக 1,617 கொள்ளைகள் நடந்து இருக்கிறது. இதை 20 பேர் கொண்ட லட்சுமி என்ற பெண் தலைமையிலான குழு செய்துள்ளது.

எவ்வளவு புகார்கள்
இதில் பலர் புகார் அளித்து இருக்கிறார்கள். டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் திருட்டு என்று மட்டும் இதுவரை 11,873 புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் செய்தது இந்த ஒரு குழு மட்டுமே.

வலைவீச்சு
இவர்களின் ஆட்டம் கடந்த ஜனவரியில் மிகவும் அதிகம் ஆகியுள்ளது. இதனால் டெல்லி போலீஸ் செயலில் இறங்கியது. எல்லா சிசிடிவி கேமரா வீடியோக்களையும் பார்த்தது. சந்தேகமாக ஆட்களை குறித்து வைத்து 8 பேருக்கு குறி வைத்தனர்.

தீரன்
நேற்று அதேபோல் பெண் போலீஸ்கள் பயணிகள் போல் சென்று இருக்கிறார்கள். சிசிடிவி கேமராவை பார்த்து போலீஸ் சிலரை போன் மூலம் அவர்களுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. அவர்கள் இறங்கும் போது அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கைது
இதில் 5 பேரும் திருடர்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. போலீஸ் இவர்களின் தலைவி லட்சுமிக்கு வலைவிரித்துள்ளனர். இன்னும் இந்த கூட்டத்தில் 15 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications