மகாராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் உட்கார்ந்திருந்த 'மர்ம' நபர் கைது
மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவின்போது உரிய அனுமதியின்றி மேடையில் பிரதமர் அருகே அமர்ந்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் கடந்த மாதம் 31ம் தேதி முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி மற்றும் பல மாநில பாஜக முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பிரதமர் அருகே மேடையில் சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் உரிய அனுமதி இன்றி அமர்ந்திருந்தார்.

விழா நிறைவில் அவர் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிரதமரின் அருகே அனுமதியின்றி நபர் ஒருவர் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில், அவரது பெயர் மிஸ்ரா (39) என்று தெரியவந்தது. பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மிஸ்ரா மீது ஐபிசி பிரிவு 170 (பொதுமக்கள் பணியாளருக்கு தொந்தரவு கொடுத்தது) பிரிவு 447 (சட்ட விரோதமாக அனுமதியற்ற இடத்துக்குள் நுழைந்தது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை நகர பாஜக நிர்வாகி என்று பொய் சொல்லி, இவர் மேடை ஏறியுள்ளார். முன்னதாக விழா நடந்த வான்கடே மைதானத்திற்குள் போலீசார் விட மறுத்தபோது தன்னை அரசு அதிகாரி என்று பொய் சொல்லி உள்ளே வந்துள்ளார். இசெட் பிளஸ் பாதுகாப்பு உள்ள பிரதமர் பங்கேற்ற விழாவில் அவருக்கு அருகே ஒரு நபர் அமர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications