"இந்தியாவின் மகள்"- நிர்பயா ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது
ஆக்ரா: டெல்லியில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை தடையை மீறி வெளியிட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி பலாத்காரம் தொடர்பாக ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியாவில் ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்தரபிரதேசத்தின் ஆக்ரா அருகே உள்ள ருப் தானு கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கேதான் தீட்சித் மற்றும் கவுரவ் ஆகியோர் இந்த ஆவணப்படத்தை பொது இடத்தில் திரையிட்டனர்.
ஆவணப்படம் ஆங்கிலத்தில் இருந்தபோதிலும், அது குறித்து மொழிபெயர்க்க தன்னார்வ தொண்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த படத்தை ஏராளமான பெண்கள் உள்பட பலரும் பார்த்தனர்.
தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்து கேதான் தீட்சித் மற்றும் கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications